- கோடைக்காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்
- சரும பிரச்சனைகள் ஏற்படும்
- பச்சை பால், சரும பிரச்சனைகளுக்கான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது
கோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர். இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். குறிப்பாக பச்சை பால், அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.
- வெயிற்பட்ட மேனிக்கு
பச்சை பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயிற்பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. பச்சை பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்
ஆண்டி-டான் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
- 5-6 ஆல்மண்டுகள், 5-6 பேரிச்சம்பழங்களை பச்சை பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்
- பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும்
- முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் விடவும்.
- முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும்.
- சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்

Kumarinet