குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம்
Views - 261 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மவுன ஊர்வலம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தின் முன் ஒரு வாகனம் சென்றது. அந்த வாகனம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு அதன் அருகில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.News