தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேட்டி
Views - 263 Likes - 0 Liked
-
கருங்கல்,
கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் ஆய்வு கூட்டம் கருங்கல் புனித அந்தோணியார் ஆலய சமூக நலக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்கூட்டத்தில் வட்டார தலைவர்கள் டென்னிஸ், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள். பிரின்ஸ், வசந்தகுமார், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்செல்வன், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், ஆஸ்கர்பிரடி, மாவட்ட துணை தலைவர் பால்மணி, வட்டார காங்கிரஸ் துணை தலைவர் குமரேசன், வட்டார பொதுச்செயலாளர்கள் எட்வின் ஜோஸ், குமாரவேல் மணி மற்றும் ஜோபின் சிறில், பிரேம்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சஞ்சய்தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் வெளிப்பாடு தான் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தலைமையை மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி, மோடி மற்றும் பா.ஜ.க.வின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.News