நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Views - 248 Likes - 0 Liked
-
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.மவுண்ட் மவுங்கானுயி,நியூசிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்News