" “If opportunity doesn't knock, build a door.”"

நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்ட அந்தியோதயா விரைவு ரெயில் இன்று முதல் இயக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Views - 259     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    தாம்பரம்- திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.50 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து நான் கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன். தொடர்ந்து, கன்னியாகுமரி பெருந்துறைமுக திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன தொடக்க விழா மாலை 4 மணிக்கு நாகர்கோவில் லட்சுமண் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து, கப்பல்துறை, கங்கா புனரமைப்பு துறை மந்திரி நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் சிறப்பு நோக்க நிறுவனத்தை தொடங்கி வைக்கிறார்.நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு கூடுதலாக தினசரி ரெயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்தநிலையில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தூத்துக்குடிக்கு வந்தபோது இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதன்விளைவாக மேலும் புதிதாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரவுநேர விரைவு ரெயில் வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். எனவே இந்த ரெயிலும் விரைவில் இயக்கப்படும்.

    தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதியின் குமரி மாவட்டக்கிளை, குமரி மாவட்ட சேவாலயா ஆகியவை இணைந்து நடத்தும் காணி பழங்குடியின மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சித் திட்ட தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு தக்கலை கொல்லன்விளையில் உள்ள பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாஞ்சஜன்யம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் ரூ.5.59 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடியால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை 10 மணி அளவில் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    News