பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை
Views - 342 Likes - 0 Liked
-
திருவட்டார்,
பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க விழாவில் நேற்று மாலை சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழைய பள்ளி அப்பா அறக்கட்டளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எம்.எஸ்.குமார், பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பள்ளியாடி திரு இருதய ஆலய பங்குத்தந்தை பெனடிட் அனலின், இணை பங்குத்தந்தை எப்ரான், இரவிபுதூர்கடை முஸ்லிம் பள்ளி இமாம் கலீம் ரகுமான், திருவருட்பேரவை செயலாளர் மரிய வின்சென்ட், சமூக சேவகர் சந்திரன், எஸ்.எம்.டி.பி. அமைப்பை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார்கள்.
சமபந்தி விருந்து
விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.News