மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
Views - 329 Likes - 0 Liked
-
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து எட்டாம் கொடைவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். எட்டாம் கொடை விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்திருந்தனர்.News