" “If opportunity doesn't knock, build a door.”"

கொத்தமல்லி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

Views - 241     Likes - 0     Liked


  • நமது அன்றாட சமையலில் உணவின் ருசியை கூட்டவும், நமது உடல்நலத்தை மேம்படுத்தவும் பல வகையான பொடிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்க்கிறோம். அந்த வகையில் அன்றாடம் நாம் சமைக்கின்ற உணவில் சேர்ப்பதை தவிர்க்கவே முடியாத ஒரு உணவு பொருளாக கொத்தமல்லி கீரை இருக்கிறது இந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்கொத்தமல்லி நன்மைகள் வயிறு பிரச்சனைகள் நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.சரும நோய்கள் கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.

    தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.கர்ப்பிணி பெண்கள் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும். அம்மை நோய் கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன என்பதை ஏற்கனவே அறிவோம். உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. எனவே அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.கர்ப்பிணி பெண்கள்

    கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும். அம்மை நோய் கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன என்பதை ஏற்கனவே அறிவோம். உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. எனவே அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.

    News