குமரி மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.5½ லட்சம் பறிமுதல்
Views - 283 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடந்து வருகிறதுஇந்த நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் கார்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர். மேலும் அரசு பஸ்சில் வரும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது.
இதே போல விளவங்கோடு சட்டசபை தொகுதியில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500-ம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் ரூ.70 ஆயிரத்து 300-ம், குளச்சல் பகுதியில் ரூ.80 ஆயிரமும் பிடிபட்டது. இந்த பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் மொத்தம் ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.News