கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைப்பு - மே 23-ந் தேதி வரை பலத்த பாதுகாப்பு
Views - 303 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 69.61 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டன. இந்த பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட் டன. குமரி மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டு இருந்த 1694 வாக்குச்சாவடிகளிலும் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் விடிய விடிய கொண்டு வரப்பட்டன.இதனையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகளுக்கு பூட்டு போடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் காஜல் ஆகியோர் முன்னிலையில் நடந்தன. அப்போது கூடுதல் கலெக்டர் ராகுல்நாத். வருவாய் அதிகாரி ரேவதி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர். மேலும் ஒரு அறைக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே ‘சீல்’ வைத்தார்.இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அறைகள் முன்பும் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பணியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. வாக்கு எண்ணும் நாளான மே 23-ந் தேதி வரை அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.News