அழகப்பபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
Views - 311 Likes - 0 Liked
-
அழகப்பபுரம்,
அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில் கூடைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா அழகப்பபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி செயலாளர் சி.என்.ராஜதுரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் அதிபர் செல்வகுமார், விளையாட்டு மன்ற நிறுவனர் தாசன், ஆண்ட்ரூஸ் மணி, நியூட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.News