தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது மாநாட்டில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சு
Views - 286 Likes - 0 Liked
-
தக்கலை,
குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாட்டின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று தக்கலை அண்ணாசிலை அருகில் நடந்தது. பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிங்காரன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் ஜாண் சவுந்தர்ராஜ் வரவேற்றார்.மாநில சி.ஐ.டி.யு. தலை வர் சவுந்தரராஜன் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. சட்டம் காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் 3 திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது, இந்த சட்ட திருத்தத்தால் யாரையும் கேள்வி கேட்காமலேயே கைது செய்து சிறை தண்டனை அளிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
பெட்ரோலுக்கு ரூ.2 கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் அரசுக்கு கோடிக்கணக்கான வருமானம் வரும். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணி
மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது, மாவட்ட செயலாளர் தங்க மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தக்கலை மேட்டுக்கடை பள்ளிவாசல் சந்திப்பில் இருந்து சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பஸ் நிலையம் வழியாக தக்கலை அண்ணா சிலை அருகில் முடிவடைந்தது.News