20 ஓவர் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா!
Views - 311 Likes - 0 Liked
-
வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 51 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும்.இப்போட்டியில் ரோகித் சர்மா அடித்த 3 சிக்ஸர்கள் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். 88 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இதுவரை 107 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் 54 இன்னிங்ஸில் 105 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 74 இன்னிங்ஸில் 103 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவர்களையடுத்து காலின் முன்ரோ, மெக்கல்லம் ஆகியோர் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.20 ஓவர் போட்டிகளில் இதுவரை 4 சதங்கள், 16 அரைசதங்கள் உள்பட 2,331 ரன்களை ரோகித் சர்மா குவித்து அதிகமான ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.News