ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி
Views - 279 Likes - 0 Liked
-
20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெக்ரானில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 27-29, 24-26, 21-25 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை சந்திக்கிறது.
News