நாகர்கோவிலில், நாளை காந்தி பிறந்தநாள் பாதயாத்திரை ஆலோசனை கூட்டம்: கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார்
Views - 307 Likes - 0 Liked
-
கருங்கல்,மகாத்மா காந்தியடிகளின் 150-வது ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை வருகிற 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஒரு வாரம் கொண்டாட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.அதன்அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி 2-ந் தேதி பாத யாத்திரை தொடக்க விழா குமரி மாவட்டத்தில் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள லேன்ஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் சஞ்சய்தத், மாநில செயல் தலைவர்கள் மயூரா எஸ்.ஜெயக்குமார், வசந்தகுமார் எம்.பி. ஆகியோர் நாளை நாகர்கோவிலுக்கு வருகிறார்கள்.நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.News