" “If opportunity doesn't knock, build a door.”"

சென்னை மெட்ரோ ரெயிலில் 9 மாதத்தில் 2.23 கோடி பேர் பயணம்

Views - 325     Likes - 0     Liked


  • கடந்த 9 மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 2 கோடியே 23 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை, 
     
    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் சென்னை மக்களுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், மெட்ரோ ரெயிலில் மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 591 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் குறுகிய நேரத்தில் தங்களது சேருமிடத்தை சென்று அடைந்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதத்தில் மொத்தம் 21 நாட்களில் தலா 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
    கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி 1 லட்சத்து 14 ஆயிரத்து 240 பயணிகளும், 6-ந்தேதி 1 லட்சத்து 16 ஆயிரத்து 575 பயணிகளும், 7-ந்தேதி 1 லட்சத்து 1,430 நபர்களும், 12-ந்தேதி அன்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 347 பயணிகளும், 13-ந்தேதி 1 லட்சத்து 19 ஆயிரத்து 888 பயணிகளும், 16-ந்தேதி 1 லட்சத்து 15 ஆயிரத்து 329 பயணிகளும், 30-ந்தேதி அன்று 1 லட்சத்து 14 ஆயிரத்து 123 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
     
    கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் மொத்தம் 2 கோடியே 23 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறிய பேருந்து சேவைகளும் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவன வழித்தடங்களில் டெம்போ வாகன வசதியும் பயணிகளின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது.
     
    News