தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
Views - 332 Likes - 0 Liked
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது 20 ஓவர் போட்டி சூரத்தில் நேற்று நடந்தது.சூரத்,இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது 20 ஓவர் போட்டி சூரத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ராதா யாதவ் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த எளிய இலக்கை இந்திய அணி 17.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 6-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.News