சென்னையில் செல்போன் பறித்த சிறுவர்கள்.. தர மறுத்த வட மாநிலத்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cell-phone-snatching-youths-heavy-attacks-north-indians-in-chennai-364974.html
Views - 394 Likes - 0 Liked
-
செல்போன் பறித்த சிறுவர்கள்.. தர மறுத்த வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் சென்னை: சென்னையில் செல்போன் கொடுக்க மறுத்த வட மாநிலத்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி நியு பேரன்ஸ் சாலையில் வசித்து வருபவர் தீபக் சர்மா (வயது 25). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார்.வேலை முடித்து தனது நண்பரான பிரமோத் சர்மா (வயது 24)வுடன் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் தீபக்கிடம் இருந்த செல்போனை பிடுங்கியுள்ளனா். தீபக் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அருகில் இருந்த இரும்பு ராடால் தீபக் மற்றும் பிரமோத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனா். தகவல் அறிந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி மற்றும் வள்ளி சம்பவ இடத்திற்கு சென்று தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து ஓட்டேரி வாழைமாநகரை சேர்ந்த குமரன் 19, பாலாஜி 22, அப்பு 22 மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை கைது செய்தனா். குமரன், அப்பு மற்றும் பாலாஜி சிறையில் அடைக்கபட்ட நிலையில் 2 சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்
News