பேச்சிப்பாறை: பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
Views - 317 Likes - 0 Liked
-
பேச்சிப்பாறையை அடுத்த மணலோடை பகுதியை சேர்ந்தவர் சீதா (வயது 37). குலசேகரம் போலீசில் சீதா ஒரு புகார் கொடுத்தார். அதில்கூறியிருப்பதாவது:-
பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ராஜன். இவர் நான் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். எனது கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். இதனை தடுக்க முயன்ற என்னை அவர் அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி ராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் 448, 354 (பி), 354 ஏ, 427, 509 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். மேலும் அவர்கள் இப்புகார் தொடர்பாக ராஜனை தேடி வருகிறார்கள். புகார் கூறப்பட்ட ராஜன் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஆவார்.
ராஜன் மீது சீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று சீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆதிவாசி மகாசபா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
News