ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
Views - 307 Likes - 0 Liked
-
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.பெங்களூரு,
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.இந்த போட்டியில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழைக்கு மத்தியில் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பெங்களூரு அணியின் வசம் வலம் வந்தாலும், கோல் எல்லையை நோக்கி அதிக முறை கவுகாத்தி அணியே முன்னேறியது. இருப்பினும் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.News