பருவ மழையின்போது மின்சாரம் தொடர்பான புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Views - 291 Likes - 0 Liked
-
வடகிழக்கு பருவ மழையின் போது மின்சாரம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.சென்னை,
வடகிழக்கு பருவ மழையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மின்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், வாரிய தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் எஸ்.வினித் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, பருவமழையின் போது மின்தடை குறித்த புகார்கள், மின்நுகர்வோர்களின் குறைகள் ஆகியவற்றை நீக்குவதற்கும், மின்விபத்து ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மழையின் போது பொதுமக்கள் மின்சாரம் தொடர்பாக 1912 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், மின்வாரிய தலைவர் புகார் மைய எண்களான 044-2852 4422 மற்றும் 044-2852 1109 மற்றும் 94458-50811 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அமைச்சரின் முகாம் அலுவலக எண் 044-2495 9525 என்ற எண்ணில் 24 மணிநேரமும் தடையின்றி புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்கள் மின்சார வாரியத்தின் இணையதள முகவரியிலும் (www.tangedco.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார்.News