நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Views - 279 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வாகனங்களிலும், ரெயில்களிலும் கடத்தி வருகிறார்கள். இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திருவனந்தபுரத்துக்கு செல்ல தயாராக இருந்த ரெயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர்.
கழிவறையில்...
அப்போது ரெயிலில் பயணிகள் இருக்கைகளின் கீழ் மற்றும் கழிவறையில் சிறு சிறு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல யாரோ மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் மர்ம நபர்கள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ரெயிலில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர்.News