சென்னையில் சில இடங்களில் பரவலாக கனமழை
Views - 326 Likes - 0 Liked
-
சென்னையில் சில இடங்களில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.சென்னை,காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட இடங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஆலந்தூர், பெரியமேடு, வேப்பேரி, மத்திய கைலாஷ், வடபழனி மற்றும் சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறதுஇதேபோன்று அடையாறு, போரூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.News