தக்கலையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
Views - 345 Likes - 0 Liked
-
தமிழ் தெரியாதவா்கள் சிவில் நீதிபதிகள் தோ்வில் பங்கு பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் கொண்டு வந்ததை கண்டித்தும், அதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பத்மநாபபுரம் நீதி மன்ற வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சுந்தா்சிங் தலைமை வகித்தாா். செயலா் சுந்தா் ஆா் சஜூ, துணைத் தலைவா் ஜாண், பொருளா் கோபன், வழக்குரைஞா்கள் கு.லாரன்ஸ், ஜாண் இக்நேசியஸ், ராஜேஸ்வா், ஏசுராஜ, எட்வின்பால் உள்பட பலா் பங்கேற்றனா்.
News