" “If opportunity doesn't knock, build a door.”"

நாகர்கோவிலில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

Views - 353     Likes - 0     Liked


  • நாகர்கோவில்,

    குமரி மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் முடிவடைந்தது. முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 ஒன்றியங்களில் மொத்தம் 65.93 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற 4 ஒன்றியங்களில் மொத்தம் 67.94 வாக்குகள் பதிவாகி இருந்தன.இதைத் தொடர்ந்து 9 ஒன்றியங்களிலும் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் சாக்குப்பையில் கட்டி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு உள்ளன.

    வாக்கு எண்ணும் மையங்கள்

    அதாவது ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்கு காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரியிலும், தக்கலை ஒன்றியத்துக்கு புன்கரை நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மேல்புறம் ஒன்றியத்துக்கு திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும், குருந்தங்கோடு ஒன்றியத்துக்கு வெள்ளிச்சந்தை மணவிளை அருணாச்சலா பெண்கள் பொறியியல் கல்லூரியிலும், திருவட்டார் ஒன்றியத்துக்கு ஏற்றக்கோடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இதே போல அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு சுசீந்திரத்தில் உள்ள எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியிலும், தோவாளை ஒன்றியத்துக்கு பூதப்பாண்டியில் உள்ள சர் சி.பி. மெமோரியல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் ஒன்றியத்துக்கு தொலையாவட்டத்தில் உள்ள புனித ஜுட்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியிலும், முஞ்சிறை ஒன்றியத்துக்கு வாவறையில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.போலீஸ் பாதுகாப்பு

    உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் அலுவலர்கள், அரசியல் முகவர்கள் தனித்தனியாக அமர வாக்கு எண்ணும் மையத்தில் கம்புகள் கட்டப்பட்டு இருக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அதோடு வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    பயிற்சி கூட்டம்

    இந்த நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கும் பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

     
    News