" “If opportunity doesn't knock, build a door.”"

குமரியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி; நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Views - 306     Likes - 0     Liked

  • தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குமரியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நகராட்சி பேரூராட்சிகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில், 
     
    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
     
    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சினை, சீனாவுடனான எல்லை பிரச்சினை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய பதிவேடு தயாரிக்கும் திட்டம் ஆகியவை குறித்து தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் விஷம பிரசாரம் செய்து வருகின்றன.
    தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குமரியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நகராட்சி பேரூராட்சிகளுக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில், 
     
    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
     
    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. காஷ்மீர் பிரச்சினை, சீனாவுடனான எல்லை பிரச்சினை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய பதிவேடு தயாரிக்கும் திட்டம் ஆகியவை குறித்து தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் விஷம பிரசாரம் செய்து வருகின்றன.
    தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் பிரசாரத்தை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இதுகுறித்து பல்வேறு முஸ்லிம் தலைவர்களும், மதகுருமார்களும் தெளிவுபடுத்தி உள்ளனர். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுடன் அங்கிருந்து வந்த முஸ்லிம்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இதுபோல இலங்கைத் தமிழர்களையும் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.
     
    இலங்கையில் தமிழர்கள் ஆட்சி ெசய்யும் காலம் விரைவில் வரும். இலங்கையில் இருந்து இந்தியா வந்த இலங்கைத் தமிழர்கள் 3½ லட்சம் ேபருக்கு குடியுரிமை வழங்கி உள்ளோம். இலங்கை அகதிகள் முகாமிலும் அவர்கள் தங்கி உள்ளனர்.
     
    பிரதமரையும், உள்துறை மந்திரியையும் நெல்லை கண்ணன் அவதூறாக பேசி உள்ளார். எனவேதான் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை கண்ணன் பேசியதற்கு பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசிய மேடையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும்.
     
    இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தி.மு.க. அப்போது தூண்டிவிட்டது. இப்போதும் அவர்கள் அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். உள்ளாட்சி அமைப்பில் கிராமப்புறங்களுக்கு தேர்தல் நடத்தியதைப்போல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
    News