பல்கலைக்கழக தடகளம்: சென்னை வீராங்கனை ஆன்ட்ரியா நீளம் தாண்டுதலில் புதிய சாதனை
Views - 302 Likes - 0 Liked
-
பல்கலைக்கழக தடகள போட்டியில் சென்னை வீராங்கனை ஆன்ட்ரியா நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்துள்ளார்.சென்னை,
அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் சென்னை பல்கலைக்கழக வீராங்கனை ஆன்ட்ரியா ஷெரின் 6.32 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் கேரள வீராங்கனை மயூக்கா ஜானி 6.28 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த 12 ஆண்டு கால சாதனையை ஆன்ட்ரியா ஷெரின் நேற்று தகர்த்தார்.News