பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Views - 306 Likes - 0 Liked
-
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது.20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News