ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததாக புகார்
Views - 319 Likes - 0 Liked
-
பூதப்பாண்டி பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அரிசி வாங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட அரிசி கல், தூசுகளுடன் தரமற்ற நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரிசியுடன் வட்டார வழங்கல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வட்டார வழங்கல் அலுவலர் நாகேஸ்வரியை சந்தித்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டதாக புகார் செய்தார்.
இதைபார்த்த அலுவலர், ரேஷன் கடை ஊழியரை தொடர்பு கொண்டு வேறு அரிசியை வழங்குமாறு கூறியதோடு, இதுபோன்ற தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் கூறினார். இதையடுத்து அவருக்கு வேறு அரிசி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News