" “If opportunity doesn't knock, build a door.”"

குமரி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் திரண்டனர்ஹால் டிக்கெட்டுடன் 2 முக கவசங்களும் வழங்கப்பட்டன

Views - 299     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 
     
    குமரி மாவட்ட பள்ளிகளில் “ஹால்டிக்கெட்“ பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் திரண்டனர். அவர்களுக்கு தலா 2 முக கவசங்களும் வழங்கப்பட்டன.
     
    ஹால் டிக்கெட்
     
    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை வருகிற 15-ந் தேதி நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுடன் சேர்த்து பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விடுபட்ட ஒரு பாடத்துக்கு உரிய தேர்வையும் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. பல மாணவ-மாணவிகள் ஆன்லைனிலேயே தங்களது ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்தனர்
    2 முக கவசம்
     
    குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி ஒவ்வொரு பள்ளியிலும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் ஹால் டிக்கெட் பெறுவதற்காக காலையிலேயே திரண்டனர். அவர்களுடன் பெற்றோரும் வந்து இருந்தனர். ஹால்டிக்கெட் வழங்கும் பணிக்காக ஆசிரியர், ஆசிரியைகளும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
     
    நாகர்கோவிலில் உள்ள பல பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திறந்த வெளிகளில் டேபிள்கள் போடப்பட்டு ஆசிரியர், ஆசிரியைகள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, அவர்களுக்கு தேர்வுக்கூடங்களுக்கு அணிந்துவர வசதியாக தலா 2 முக கவசங்களும் வழங்கப்பட்டது.
     
    மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆகியோருக்கு பள்ளி வளாகத்துக்குள் கைகளை சுத்தம் செய்யும் திரவம் வழங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளும் தேர்வு அறைகள் அமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.
     
    தோவாளை
     
    தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் 92 பேருக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீநாகேஷ் ஹால் டிக்கெட் வழங்கினார். மேலும், மாணவ- மாணவிகளுக்கு முக கவசங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.ஆர்.முருகன், இணைச்செயலாளர் மணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
    News