7 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிவடைந்தது:ஈரானில் இருந்து வந்த 530 மீனவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பு
Views - 318 Likes - 0 Liked
-
ஆரல்வாய்மொழி,ஈரானில் இருந்து வந்த 530 மீனவர்களும் தனிமைப்படுத்தல் நிறைவு பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிவாரணம் வழங்கினார்ஈரான் நாட்டில் தங்கியிருந்த 535 குமரி மீனவர்கள் கப்பல் மூலம் கடந்த 1-ந் தேதி தூத்துக்குடி வந்தடைந்தனர். அங்கிருந்து குமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 535 மீனவர்களில் தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 210 பேரும், கடியப்பட்டணம் புனித ஜாண்ஸ் கல்லூரியில் 56 பேரும், வெள்ளமோடி உதயா கல்லூரியில் 117 பேரும், தூத்தூர் புனித யூதா கல்லூரியில் 39 பேரும், தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் 47 பேரும், அதங்கோடு நாராயணகுரு சித்தார்தா பொறியியல் கல்லூரியில் 66 பேரும் தங்க வைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 7 நாட்கள் கழித்து 2-வது பரிசோதனை முடிக்கப்பட்டது. அப்போது 530 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து 530 மீனவர்கள் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.தளவாய்சுந்தரம்தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்த 210 மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலா ரூ.1000 மற்றும் 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கினார்.பின்னர் அவர் கூறுகையில், “ஈரானில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி 7 நாட்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மீனவர்கள் அனைவரும் ஈரான் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வர எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டீர்கள் என்பதை நன்கு அறிவீர்கள். எனவே மீனவர்கள் தங்களது நலன் கருதியும், தங்கள் குடும்பத்தினரின் நலன் கருதியும், இன்னும் 7 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீனவர்கள் வீட்டுக்கு சென்றபின் காய்ச்சல், சளி உள்ளிட்ட ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்“ என்றார்.எஸ்.ஏ.அசோகன்இதனையடுத்து மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் கடியப்பட்டணம் புனித ஜாண்ஸ் கல்லூரியில் 56 மீனவர்களுக்கும், வெள்ளமோடி உதயா கல்லூரியில் 117 மீனவர்களுக்கும் தனது சொந்த செலவில் தலா ரூ.1000 மற்றும் 5 கிலோ அரிசி வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சாந்தினி, பகவதியப்பன், அழகேசன், துணை இயக்குனர் (மீன்வளத்துறை) இளம்வழுதி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் பங்குதந்தை ஸ்டீபன், பள்ளம் பங்குதந்தை சூசை ஆன்றனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.இதுபோல், தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, தூத்தூர் புனித யூதா கல்லூரி, அதங்கோடு நாராயணகுரு சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்த மீனவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு நிவாரண பொருட்கள் வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது குமரி மாவட்டத்தை சேர்ந்த 44 மீனவர்கள் கப்பலில் இடம் இல்லை என்ற காரணத்தால் ஈரானில் உள்ளனர். அவர்களுக்கு அங்கு தங்குவதற்கு இடமோ, உண்ண உணவோ, குடிநீரோ கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களை வருகிற 14-ந் தேதி ஈரானில் இருந்து இந்தியா வரும் சிறப்பு விமானத்தில் அழைத்து வர வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் யூனியன் தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்News