நாகர்கோவில் தனியார் வங்கி ஊழியர் 2 பேருக்கு கொரோனா
Views - 313 Likes - 0 Liked
-
நாகர்கோவில் பகுதியில் தனியார் வங்கி ஊழியர் 2 பேருக்கு உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கி ஊழியர்கள், நகைக்கடை ஊழியர்கள், மருந்து கடை ஊழியர்கள் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெருவில் உள்ள 60 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வடிவீஸ்வரத்தில் 60 வயதுடைய முதாட்டிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதேவன்பிள்ளை தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
News