அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு
Views - 313 Likes - 0 Liked
-
சென்னை,கொரோனா தொற்று காரணமாக 2020-2021-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவது தள்ளிப்போய்க் கொண்டு இருக்கின்றன. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதற்கு கடந்த 11-ந்தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்தார்.அதன்படி, 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இன்று தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் உள்ளவற்றை ஒவ்வொரு பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும் என்றும் அரசு கூறியிருக்கிறதுNews