நாகர்கோவில் நாகராஜா கோயில் திறந்திட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்க அனுமதி என அறிவித்ததை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அறிவுரைப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் நாகர்கோவில் நாகராஜா திருக்கோயில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கோயில் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தது.