மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் இயங்கும் தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் பழைய மார்க்கெட் பகுதிக்கு மாற்ற வேண்டும் என வர்த்தகர்கள் நகராட்சி அதிகாரிக்கு மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மார்த்தாண்டம் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்டில் மாற்றப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பொது போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இதனால், மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் பஸ்களும், பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வதால் வியாபாரிகளுக்கும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே, பஸ் ஸ்டாண்டில் இயங்கும் சில்லறை வியாபாரிகள் பழையபடி மார்த்தாண்டம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்க தலைவர் தினகர் தலைமையில் நகராட்சி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.