ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; இனிமே டிக்கெட் விலை தாறுமாறு? அதுவும் இங்கெல்லாம்!
Views - 328 Likes - 0 Liked
-
ரயில் டிக்கெட்டில் டோக்கன் பயனாளர் கட்டணம் என்ற புதிய அம்சம் சேர்க்கப்படவுள்ளதால் பயணிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலைஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இதனால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. எளிய மக்களும் பயணிக்கும் வகையில் குறைவான கட்டணம் இருப்பதால், பலரின் விருப்பம் ரயில் பயணமாக இருக்கிறது. இந்நிலையில் பரபரப்பாக இயங்கக்கூடிய ரயில் நிலையங்களில் பயணிகளின் ரயில் டிக்கெட்டில் ”டோக்கன் பயனாளர் கட்டணம்” என்ற புதிய அம்சத்தைச் சேர்க்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை உயரும். இவ்வாறு கூடுதலாக பெறப்படும் தொகை ரயில் நிலையங்களின் மேம்பாட்டிற்கும், நவீன உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News