" “If opportunity doesn't knock, build a door.”"

முடிஞ்சு போன வேலைக்கு டெண்டரா? முறைகேடு குறித்து முதல்வருக்கு மனு

Views - 306     Likes - 0     Liked


  • குழித்துறை நகராட்சியில் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை நகராட்சி அலுவலக வளாகத்தில் மின்சாதன பொருட்கள் வைக்க தனிஅறை கட்டுதல், டூவீலர் பார்க்கிங் அமைத்தல், நகராட்சிக்கு சொந்தமானமுனுசாமி ஷாப்பிங் காம்பிளக்ஸ் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளுதல், உண்டனாங்குழி – திருத்துவபுரம் பள்ளி, குழித்துறை ஆர்சி தெரு –கோர்ட் பின்புறம் வரை ரோடு கூடுதல் பணி மேற்கொள்ளுதல் போன்றபணிகளுக்கான டெண்டர் இன்று (24-ம் தேதி) நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், டெண்டர் விடப்போவதாக அறிவிக்கப்பட்ட பணிகளில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டவை என்றும் இதனால், ஊழல் மற்றும் முறைகேடு திட்டமிட்டு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பாதவது, குழித்துறை நகராட்சியில் பணிகள் செய்வதிலும், டெண்டர்விடுவதிலும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இன்று நடக்க உள்ள டெண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்து சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த பணிகளும் முறையாக மேற்கொள்ளாமல் முடிக்கப்பட்டுள்ளது. முடிவடைந்த பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டு தமிழக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு போட்டோக்களுடன் புகார் அனுப்பியுள்ளேன். இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

    News