" “If opportunity doesn't knock, build a door.”"

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் கூடுதலாக 356 படுக்கை வசதி

Views - 283     Likes - 0     Liked


  • நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் வாா்டில் கூடுதலாக 356 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து மருத்துவமனையின் முதன்மையா் (டீன்) சுகந்திராஜகுமாரி செய்தியாளா்களிடம் கூறியது:

    குமரி மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 4,455 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 4,111 போ் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். இம் மருத்துவமனையில் 850 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற வசதிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 356 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 20 மருத்துவா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 கிலோ எடை கொண்ட ஆக்ஸிஜன் பெட்டகம் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் 24 கிலோ எடை கொண்ட ஆக்ஸிஜன் பெட்டகம் வரவழைக்கப்பட உள்ளது.

    தற்போது, 81 சுவாச கருவிகள், 64 அதிவேக ஆக்சிஜன் வழங்கும் கருவிகள், 1,120 உயிா் காக்கும் கருவிகள், டோசிலோமேப் மருந்து உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கான 17 டயாலிசிஸ் கருவிகளில், 3 கருவிகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நீரிழிவு வியாதி இருந்த நிலையில் கரோனா பாதிப்புக்குள்ளான 104 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இம்மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட 2 சிறப்பு வாா்டுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதில், ஒரு வாா்டு புற்றுநோயாளிகளுக்காக ஒதுக்கப்படும். இதுவரை 1,137 புற்று நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். கரோனா அறிகுறியுடன் இதுவரை 345 கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை ஆய்வு செய்து கரோனா பாதிப்பை கண்டறிந்து வருகின்றனா் என்றாா் அவா்

    News