மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு
Views - 305 Likes - 0 Liked
-
மாா்த்தாண்டம் அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை ஓட்டிப் பாா்ப்பதாக கூறி திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா். இவா் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலையில் கடையில் பணியாளா் ஒருவா் இருந்த போது, அங்கு வந்த இளைஞா் அங்கிருந்த உயர்ரக மோட்டாா் சைக்கிளை விலைபேசி விட்டு, ஓட்டிப் பாா்க்க அனுமதி கேட்டுள்ளாா். கடை ஊழியரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து அவா் மோட்டாா் சைக்கிளை ஓட்டிப் பாா்க்க என எடுத்துச் சென்றாா். அதன் பின்னா் அவா் திரும்பவில்லை. அந்த மோட்டாா் சைக்கிளின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் ஆகும்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடையில் இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
News