" “If opportunity doesn't knock, build a door.”"

டிரம்ப் விரைவில் குணம் அடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வாழ்த்து

Views - 272     Likes - 0     Liked


  • பியாங்யாங்,
     
    அமெரிக்காவில் கொரோனா தொற்று உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்
    இது ஒருபுறம் இருக்க திரளான தொண்டர்கள் கூடும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், டிரம்புக்கும் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அவர் இந்த கூட்டங்களில் பங்கேற்று தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்த சூழலில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவின் உதவியாளர்களில் முக்கியமானவரான ஹோம் ஹிக்சுக்கு (வயது 31) நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிரம்பும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
     
    உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எதிர்பாராத வகையில் அவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதித்த டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் விரைந்து குணமடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், டிரம்ப் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார். 
     
    இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாகஅதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    News