கூட்டுறவுத் துறையில் கபசுர குடிநீர் வழங்கல்
Views - 297 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் அரசின் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கூட்டுறவு சங்கத்தில் நடைமுறைபடுத்தும் பொருட்டு இ–சேவை மையத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கும் சங்கத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கும் தினமும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி துவக்கி வைக்கப்பட்டதை அடுத்து கூட்டுறவு சங்கத்தில் தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் நாகலிங்கம், மாவட்ட சங்க செயல் தலைவர் தவசி, செயலாளர் லெட்சுமணன், பணியாளர்கள் லதா, மெரீனா, கணினி இயக்குபவர் உஷா, கலைவாணி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News