தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..!
Views - 307 Likes - 0 Liked
-
ஆன்லைன் மூலம் மட்டுமே தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் .நிறைமதி, வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளுக்கும் வரும் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை இணையவழி மூலம் உரிமத்தை புதுப்பிக்க வருகிற 31ந் தேதி கடைசி நாளாகும்.
எனவே உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in இணையதள முகவரியில் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு அதை இணையவழி முறையிலேயே வழங்கப்படும். இதற்கான அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை.புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிம திருத்தம், உரிம மாற்றம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் வௌி மாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரியும் தொழிலாளர் சட்டத்தின் கீழான பதிவு சான்றுகளுக்கு மட்டும் வரைவோலை, சலான் மூலம் உரியதொகை செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதன் 3 நகல்கள் மற்றும் வரைவோலை, செலுத்துச்சீட்டு உடன் இணைத்து அனுப்ப வேண்டும் என தொிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வரைவோலை எடுக்கப்படும் நேர்வில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் (Joint Director, Industrial Safety & Health Payable at Tirunelveli) என்ற பெயரிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் (Joint Director, Industrial Safety & Health Payable at Tuticorin) என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும் என தொிவிக்கப்படுகிறது.
News