பூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி
Views - 322 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதைத் தொடர்ந்து பூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் உடைந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பூதப்பாண்டி அருகே கடுக்கரையில் கஞ்சி ஆறு உள்ளது. ஆற்றின் மறுபுரம் இரவிபுதூர் உள்ளது. இரவிபுதூர் செல்ல கஞ்சி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்த நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தெடர்ந்து தற்பொழுது புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடுக்கரையிலிருந்து இரவிபுதூர் செல்ல கஞ்சியாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கஞ்சியாற்றில் நேற்று முன்தினமிருந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காஞ்சியாற்றில் போடப்பட்டுள்ள தற்காலிக பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் கடுக்கரையிலிருந்து இரவிபுதூர் செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி தோவாளை பஞ்., யூனியன் ஆணையாளர் உட்பட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News