கஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்
Views - 273 Likes - 0 Liked
-
குமாரபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கி மக்களை சீரழித்து வரும் நிலையில் இளைஞர்கள் போதை பொருளான கஞ்சா விற்பனையில் இறங்கியுள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்று கொண்டிருக்கிறது. எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தக்கலை உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் படையினர் மருந்துக்கோட்டை ,முட்டைக்காடு, சரல் விளை, மேக்காமண்டபம், ஈத்தவிளை, குமாரபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ரகசிய வாகன சோதனை நடத்திய பின் சித்திரங்கோடு பகுதிக்கு சென்றனர்
அப்போது சித்திரங்குடி ஜங்ஷனிலிருந்து ஐந்து இளைஞர்கள் போலீசாரை கண்டதும் தங்களது பைக்குகளில் தப்பிச்செல்ல முயன்றனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஐந்து பேரையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்இந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சித்திரங்கோடு அஜித் 26,வைகுந்த் 22, பெருஞ்சிலம்பு ஜினோ 22,மேக்காமண்டபம் ஆகாஷ் 20 ,அடையா மடை சதீஷ் 31 ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.பின் அவர்கள் மறைத்து வைத்திருந்த கஞ்சா மற்றும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் வழக்கு பதிவு செய்தார். பின் 5 பேரையும் போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
News