சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கி காணப்படுகிறது.
Views - 316 Likes - 0 Liked
-
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தின் அருகில் உள்ள கடல்பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
இந்த சிலையை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை ரசித்து போட்டோ எடுத்துகொள்வது வழக்கம். தற்போது கடந்த ஆறு மாதமாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கியுள்ளது. ஆனால் படகு சேவை தொடங்காத நிலையிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மின்விளக்குகள் ஒளிந்து அழகுக்கு அழகு சேர்க்கும், நிலையில் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் மின்விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி காணப்படுகிறது.
இதனால் கடற்கரையில் அமர்ந்திருக்கும் சுற்றுலா பயணிகள் இரவில் மின்விளக்கில் திருவள்ளுவர் சிலையை ரசிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருவள்ளுவர் சிலையை அனைத்து சுற்றுலா பயணிகளும் இரவு நேரங்களிலும் கடற்கரையில் அமர்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ஒன்றியக் செயலர் தாமரைபாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
News