வீசிய அலையில் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம்
Views - 281 Likes - 0 Liked
-
நித்திரவிளை அருகே தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற படகு மீது அலை அடித்து தூக்கி வீசப்பட்டதில் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயமாகியுள்ளனர்.
நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த நசரேத் மகன் பெறின் என்ற பிரடி(35). இவருக்கு சொந்தமான இம்மானுவேல் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் நேற்று காலை இதே பகுதியை சேர்ந்த சண்ணி(35), றோபின்(25), தேவதாஸ் (56), சிலுவை தாசன்(51), லிஜன்(25), ராகுல் (21), சுதிர் (35) ஆகியோர் சேர்ந்து மீன் பிடிக்க சென்றனர். இவர்களது படகு தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதியில் சென்ற போது படகின் மீது அலை அடித்து வீசப்பட்டதில் பெறின் என்ற பிரடி(35) கடலில் தவறி விழுந்து மாயமானார். இவருக்கு மெற்சி(28) என்ற மனைவியும் மெர்பின் டோபில்(6), அயோப்(3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாயமான மீனவரை அப்பகுதி மக்கள் தங்களது படகில் சென்று தேடி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஏசுதாசன் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியாகி உள்ளார். தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றதில் நான்கு மாதங்களில் 5 பேர் துறைமுக முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாயமாகி உயிர் இழந்து உள்ளனர்.
News