பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
Views - 305 Likes - 0 Liked
-
பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தாா்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது , அவரிடம் சித்தா பிரிவில் உபகரணங்களை இயக்க உயா் மின்னழுத்த இணைப்பு வழங்கவும், மகப்பேறு சிகிச்சைக்கு பெண் மருத்துவரை நியமிக்கவும் வலியுறுத்தினா்.மேலும், மருத்துவமனை ஊழியா்கள் பலா் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தற்காலிக பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் பணியாளா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
அவா்களிடம், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பேசி தீா்வு காணப்படும் என உறுதியளித்த எம்எல்ஏ. சுகாதார மைய வளாகத்தை சுத்தமாக வைக்குமாறும், மூலிகை தாவரங்களை நட்டு பராமரிக்குமாறும், நோயாளிகளை கனிவுடன் அணுகுமாறும் கேட்டுக்கொண்டாா்.News