புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் 27 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
Views - 308 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சார்பாக வரும் 23 ம் தேதி கற்பிக்கும் பணி துவங்க உள்ளது. முதல் கட்டமாக கடந்த 6 மற்றும் 7 ம் தேதிகளில் திருச்சியில் வைத்து மாநில கருத்தாளர்களுக்கு பயிற்சி நடந்தது.
மாவட்ட கருத்தாளர்களுக்கு 2 நாட்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒரு வட்டாரத்திற்கு 2 ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஒரு தொடக்க கல்வி ஆசிரியர் என்று 3 பேர்கள் வீதம் 9 வட்டாரத்திற்கு 27 பேருக்கு மாநில கருத்தாளர்கள் வில்லுப்பாட்டு மூலம் பயிற்சி வழங்கப்பட்டது பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் துவக்கி வைத்தார். பயிற்சியில் உதவி திட்ட அலுவலர் பாக்கிய சீலன், மாநில கருத்தாளர்கள் ஜோஸ், லாரன்ஸ், நாகராஜன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுகிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற 27 பேரும் வட்டார அளவில் ஒரு வட்டாரத்திற்கு 20 பள்ளிகளில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்றுவிக்க உள்ள 20 தன்னார்வலர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் பயற்சி அளிக்க உள்ளனர். தன்னார்வலர்கள் வரும் 23 ம் தேதி முதல் கற்பிக்கும் பணியை துவங்க உள்ளனர்.
News