" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரியில் களை இழந்த சபரிமலைசீசன் : வருவாய் இழந்த பஞ்.,நிர்வாகம்

Views - 300     Likes - 0     Liked


  • ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் தொடங்க (கார்த்திகை 1-ம் தேதி)இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கன்னியாகுமரி களை இழந்து காணப்படுகிறது. கடும் விரதம் இருந்து சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்க வரும் ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரை பயண திட்டத்தில் கன்னியாகுமரிக்கு முக்கிய இடமுண்டு. புண்ணிய தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் தரிசனம் செய்துவிட்டு சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமனம் போன்றவைகளை கண்டு ரசிக்கும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து துணிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், அழகு பொருட்கள், கடல் சிப்பிகள் போன்றவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். பஸ், கார், வேன்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் காலையில் வந்தால் மாலைக்குள் இடங்களை சுற்றி பார்த்துவிட்டு பொருட்களையும் வாங்கிவிட்டு திரும்பி விடுகின்றனர். சபரிமலை சீசன்: ஆண்டுதோறும் (கார்த்திகை ஒன்றாம்தேதி) நவம்பர் 16ம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 20 ம் தேதி வரை 60 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த சபரிமலை சீசனில் குறைந்தபட்சம் 10 லட்சத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் வரகூடும் என்பதால் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பஞ்., நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படும் கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்காக கன்னியாகுமரி வருகின்றனர். இதற்காக சன்னதிதெரு, கடற்கரைசாலை, காந்திமண்டப சாலை ஆகிய இடங்களில் பஞ்.,சார்பில் 250-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளும், பக்தர்கள் வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக கடற்கரை சாலை, சன்செட்பாயின்ட் போன்ற இடங்களில் தற்காலிக கார்பார்க்கிங், கழிப்பறை, குளியலறை போன்றவை அமைக்கப்பட்டு ஏலம் விடப்படும். இந்த இனங்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிகணக்கான ரூபாய் பஞ்.,நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வழக்கமாக களைகட்டி காணப்படும். கன்னியாகுமரி இந்தாண்டு வெறிச்சோடி காணப்படுவதோடு பஞ்.,நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    News