மாவட்ட கருவூலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
Views - 263 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்ட கருவூலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் செயலாக்கம் குறித்து மாவட்ட கருவூல அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும் பட்டியல்கள் தயாரித்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளும் 878 பணியாளர்கள், பட்டியல் அனுமதிக்கும் 436 அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் சார்நிலை கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலத்தில் பட்டியல்களில் அங்கீகரிக்கும் 120 பணியாளர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் வாயிலாக கருவூல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்து அவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள், உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர்.
News